உலகம் நமக்காக!

உலகம் நமக்காக!

Friday, 2 September 2011

'பாசக்கார' தலைவர் அறிக்கையும் 'படிக்காதவன்' காமெடியும்!

முன்குறிப்பு: நான் யாருடைய ஆதரவாளரும் இல்லை, எதிர்ப்பாளரும் இல்லை. நியாயத்தின் பக்கமே எப்போதும்!

ரெண்டு நாளைக்கு முன்னாடி நம்ம 'தமிழ்த்தாய்' - அதாங்க 'அம்மா'  சட்டமன்றத்துல விதி 110 க்கு கீழ  ஒரு அறிக்கை படிச்சாங்க. அதுல பேரறிவாளன் உள்ளிட்ட மூணு பேரை காப்பாத்தற சக்தி என்கிட்டே இல்லனு சொன்னாங்க. அதுக்கு பதில் அளிக்கற மாதிரி நம்ம 'அய்யா' - ஓ குழப்பமாகுதா....சரி..நம்ம 'பாசக்கார' தலைவரு நேத்து ஒரு அறிக்கை உட்டாரு.

தமிழ்த்தாய் : 
சென்னை உயர் நீதிமன்றம், 25.11.1999 அன்று வழங்கிய தீர்ப்பில், மனுதாரர்கள் தொடுத்த வழக்குகளை ஏற்று கருணை மனுக்களை நிராகரித்த ஆளுநரின் ஆணையை தள்ளுபடி செய்து, அமைச்சரவையின் ஆலோசனையைப் பெற்று புதிய ஆணை வழங்குமாறு அறிவுறுத்தியது.

இந்தப் பொருள் குறித்து 19.4.2000 அன்று அன்றைய முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவு எடுக்கப்பட்டது:
"தூக்கு தண்டனை வழங்கப்பட்ட நான்கு கைதிகளில் ஒருவரான நளினியின் பெண் குழந்தை அனாதை ஆகி விடும் என்று முதல்வர் தெரிவித்த கருத்திற்கிணங்க, நளினி ஒருவருக்கு மட்டும் கருணை காட்டி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என்றும், மற்றவர்களைப் பொறுத்த வரையில் அவர்களது கருணை மனுக்களை நிராகரிக்கலாம் என்றும் ஆளுநருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவை முடிவெடுத்தது."

கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையின் முடிவினை ஏற்று ஆளுநர் 21.4.2000 அன்று ஒப்புதல் அளித்தார். அதன்படி தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 நபர்களில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது.
(அதாவது அமைச்சரவை எடுத்த முடிவு - நளினியை காப்பாத்தலாம், மத்தவங்களை போட்டு தள்ளலாம்-நோ ப்ரோப்ளம்!)

பாசக்கார தலைவர் :
29.8.2011 அன்று 110-வது விதியின் கீழ் சட்டப்பேரவையில் அறிக்கை படித்த முதலமைச்சர் ஜெயலலிதா, 19.4.2000 அன்று தி.மு.க. ஆட்சி நடைபெற்ற போது நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி ஒருவருக்கு மட்டும் கருணை காட்டி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கலாம் என்றும், மற்றவர்களின் கருணை மனுக்களை நிராகரிக்கலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி, தன்னையும் அறியாமல் நளினியின் மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைவதற்கு தி.மு.க. அரசு தான் காரணம் என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார்.
(இப்போ பேசறது மூணு பேரோட தூக்கு தண்டனையா பத்தி. எதுக்கு நளினியை உள்ள இழுக்கறீங்க?? அப்போ அந்த மூணு பேரை 'போட்டுத்தள்ள சொன்னது நீங்க தானா??)

உச்சநீதிமன்றம் நளினி உள்ளிட்ட இந்த நால்வரின் தூக்கு தண்டனையை 11.5.1999 அன்று உறுதி செய்தது. அதே உச்சநீதிமன்றத்தில் அவர்கள் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவும் 8.10.1999 அன்று நிராகரிக்கப்பட்டு விட்டது. 17.10.1999 அன்று ஆளுநரிடம் அளித்த கருணை மனுக்களை அவர் 27.10.1999 அன்று நிராகரித்து விட்டார். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில்தான் 25.1.1999 அன்று ஆளுநரின் ஆணையை தள்ளுபடி செய்து விட்டு, அமைச்சரவையின் ஆலோசனையைப் பெற்று புதிய ஆணை வழங்கிட தீர்ப்பளித்தது. அந்த சூழ்நிலையில்தான் 19.4.2000 அன்று கழக அமைச்சரவை கூடி முடிவெடுத்தது.
(தலைவரே....என்ன முடிவேடுத்தீங்கனு சொல்றதை மட்டும் 'கரெக்டா' விட்டுடீங்க!!)

தமிழ்த்தாய் : இந்த மூன்று நபர்களும் குடியரசுத் தலைவருக்கு அளித்த கருணை மனுக்களை தமிழ்நாடு அரசு 28.4.2000 நாளிட்ட கடிதத்தின்படி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.

பாசக்கார தலைவர் : ஜெயலலிதா படித்த அதே அறிக்கையில்- "இந்த மூன்று நபர்களும் குடியரசு தலைவருக்கு அளித்த கருணை மனுக்களை தமிழ்நாடு அரசு 28.4.2000 நாளிட்ட கடிதத்தின் படி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது'' என்றும் சொல்லியிருக்கிறார். அவ்வாறு 28.4.2000 அன்று தி.மு.க. அரசு மத்திய அரசுக்கு அந்த கருணை மனுக்களை அனுப்பி வைத்ததின் காரணமாகத்தான் அவர்கள் மூவரின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படாமல் இந்த 11 ஆண்டு காலமும் அவர்கள் சிறையில் நீடிக்க முடிந்தது என்பதை ஜெயலலிதாவே தனது அறிக்கை மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.
(ஓ...ஆளை போடவும் சொல்லிட்டு 'போஸ்ட்மேன்' வேலை செய்ததை மட்டும் பெருமையா சொல்லிக்க வேண்டியது!)

இத பாக்கும் போது, தனுஷோட 'படிக்காதவன்' படத்துல வர விவேக் காமெடி தான் ஞாபகத்துக்கு வருது.

வில்லனோட அடியாள்: யார் இங்க 'கேங் லீடர்' (பாசக்கார தலைவர்)
தனுஷ்: ம்...கேங்கும் இவர் தான் லீடரும் இவர் தான் (திமுகவும் இவர் தான்...தலைவரும் இவர் தான்)
அடியாள்: உங்கள சமரசிம்மா ரெட்டி வர சொன்னாரு....(தமிழ்த்தாய்!!)
விவேக்: ஏன்?
அடியாள்: ஏன்னா....இது அவர் கண்ட்ரோல்ல இருக்கற ஏரியா...(கரண்ட் தமிழ்நாடு?)
விவேக்: அது நேத்து ஆறு மணிவரைக்கும்....ஆறு முப்பது மணில இருந்து இந்த கேங் லீடர் கன்ட்ரோலுக்கு வந்தாச்சு (எப்போ?)
அடியாள்: அந்த 'டீல்' விஷயமாத்தான் ஒரு தடவையாவது உங்களை பாக்கணும்னு அங்க கூட்டிட்டு வர சொன்னாரு.
விவேக்: ஒழுங்கா அவன் இங்க வந்து என்ன பாத்தான்னா 'செய்கூலி' இல்ல ஆனா 'சேதாரம்' உண்டு. நான் அங்க வந்தா 'செய்கூலியும் உண்டு சேதாரமும் உண்டு'.
தனுஷ்: இப்போ அவன் கேட்டதுக்கும் நீங்க சொன்னதுக்கும் என்ன சம்பந்தம்? (அதையே தான் நாங்களும் கேட்கறோம் தலைவரே!)

விவேக்: 'பஞ்ச்' நல்லா இருக்குதானு மட்டும் பாக்கணும், அதுல ஆராய்ச்சி பண்ணக்கூடாது...இதை எழதி மனப்பாடம் பண்ண எவ்வளவு சிரம பட்டேன் தெரியுமா?? (நாங்க தான் சிரம படறோம் உங்க கூத்தால :()

இப்படி அறிக்கை, எதிர் அறிக்கை எல்லாம் படிச்சு டென்ஷன் ஆக வேண்டாம்னு நானும் நெனைக்கறேன். ஹ்ம்ம்...எங்க முடியுது. அவங்களும் நிறுத்த மாட்டாங்க, நாமும் நிறுத்த மாட்டோம்!!

5 comments:

S.M. Nowshed said...

அரசியல்ல இதல்லாம் சகஜமப்பா !!!

Prabu Krishna said...

ஹா ஹா ஹா சூப்பர்....

Philosophy Prabhakaran said...

நன்று... இது உங்கள் முதல் பதிவு மாதிரியே தெரியலையே...

sontha sarakku said...

நன்றி நண்பர்களே...தொடர்ந்து வாங்க!

rajamelaiyur said...

இன்று என் வலையில்

சன் டி.வி அரசுடமையாகிறது- பரபரப்பு செய்தி